Friday, 30 September 2011

சீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி?


இப்போதெல்லாம் குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.
வெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:

பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.
  • காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.
  • ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.
  • வெயில் காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
    ஆண்களுக்கு காட்டன் வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட், சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.
  • காட்டன் குர்தா, பைஜாமாவும் பொருத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment